kavithai


பட்ட காலிலேபடும் 
கெட்டகுடியே கெடும் - மனிதா நீ 
பட்டுக்கெட்டும் பதறவில்லையே! 

இயற்கையை ஏளனிக்காதே 
உன் பாதையில் பள்ளம் விழத்தான் போகிறது. 

இன்னும் சில வினாடிகளில். 

இந்த பூமி புரண்டு படுக்கும். 
ஓசோன் உதைபட உதைபட 
பிரளய நுரையீரல் கதவடைக்கும் 

ஆகாயப்பஞ்சை அக்னி கொளுத்தும் 
பச்சையம் நிச்சயம் தொலையும் 

நவக்கோள்களும் 
தவக்காலம் முடிக்கும். 
கதிரவன் பூமியில் குடியேறுவான் 

ஆழி பொட்டலாகும் 
தாகம் தணிக்க தண்ணீர் திருடுவாய் 
கிரகம் கடக்க ஏணி தேடுவாய். 

உன் வயிறு மச்சு காலியாகும் 
கிடைப்பதை ஒன்று விட மாட்டாய். 

ஏட்டில் மட்டும் வேளாண் பார்ப்பாய். 
பூக்காத மரங்களுக்கு ஜோசியம் பார்ப்பாய். 
மந்திகள்மீது பொறாமை கொள்வாய் 
மனித உருவு மாறும். 
இலைதழை மட்டுமல்ல - நீயும் 
இனப்பெருக்கமின்றி துடிப்பாய். 
சூடுதாங்காமல் தேடியோடுவாய் 
சுடுகாடும் நிரம்பிவழியும். 

இயற்கையை ஏளணிக்காதே!!!!



Comments